Thursday 2 August 2012

கோவை ,சிறுவாணி தண்ணீர் , கூந்தல் அழகு





கூந்தலும் தண்ணீரும் என்றவுடன் என் நினைவிற்கு வருவது என் இனிய கோவையே .

கோவையில் சிறுவாணி தண்ணீர் . ஆஹா ! என்ன அருமை என்ன அருமை . ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் வரும் .( நான் சொல்லுவது 1980 வரை இப்பொழுது எப்படியென்று தெரியாது), அதுவும் hand pump . அடித்து அடித்துதான் தண்ணீர் நிறைக்க வேண்டும். அடுத்த நாள் வெள்ளி கிழமை என்றால் தலைக்கு குளிப்பவர்கள் ஒரு பக்கெட் கூட நிரப்பிக்கொள்ளவேண்டும் காலேஜிலிருந்து வந்தவுடன் டீ குடித்துவிட்டு என் turn எடுத்து அடிக்கும் அவசரம் இனிமையான நினைவு. அப்பொழுது பக்கத்துவீட்டிற்கு மதில் சுவர் குட்டையாக இருக்கும் . ஒரு நாலு வீட்டில் தண்ணி அடிப்பது தெரியும் . அதனால் பேசிகொண்டே கடகடவென்று தொட்டியில் நீர் நிரப்பி அடுத்த ஆள் கை மாற்று கொடுக்கும் அவசரம் , நிம்மதி......... சொல்லி முடியாது.
மேலும் வெள்ளி கிழமை தலைக்கு குளித்து நல்ல ஆடை அணிந்து ஏற்பாடாக பூ வங்கி வைத்து , சூடி............

பூ என்றவுடன் நினைவில் வருவது.......... கோவையில் ஒருவிதமாக நெருக்கமாக ஜாதிப்பூ தொடுப்பார்கள் . மிக அழகாக இருக்கும் .அதை கொஞ்சமாகத்தான்  சூடும் வழக்கம் உண்டு .வெள்ளி  அன்று காலேஜ் முழுக்க மிக அழகான காட்சியாக இருக்கும் .சிறுவாணிதண்ணீ ருக்கு  தலைமுடி நன்கு வளரும் . அங்கு பச்சை அரப்பு என்று ஒரு தலைக்கு தேய்க்கும் போடி
 ஒன்று கிடைக்கும் . நாங்கள் அனைவரும் அந்த பொடிதான் உபயோகிப்பபோம் . முடி நன்கு மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

கோவை என்றவுடன் இனிமையான தென்றல் காற்று வீசுவதைப்போல , கண்ணை மூடி ரசிக்கும் melody பாடல்களைப்போல ( என் இனிய பொன் நிலாவே .................) close to my heart.