Thursday, 21 June 2012

கூந்தல் பராமரிப்பு




 கூந்தல் பராமரிப்பு :

  அழகு என்பது இறைவன் கொடுத்த வரம்தான் அதில் சந்தேகமில்லை அனால் அதை பேணுவது நிச்சயம் நம் கையில்தான் இருக்கிறது என்பது என் கருத்து இதை நீங்களும் ஒத்துகொள்வீரகள் என்று நம்புகிறேன் .

இந்த ப்ளாக் எழுதுவதற்கு எனக்கு சிறிது தகுதி இருபதாக எண்ணுகிறேன் ஏனென்றல் நான் ஹெர்பல் காஸ்மெடிக் பிரிவில் கடந்த 20 வருடங்களாக product செய்து வருவதனாலும் மேலும் ஹெர்பல் மூலிகை ஆராச்சி செய்வதனாலும் ஓரளவு authentic -காக பஹிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன் .

முதலாக அழகிய பளபளப்பான ஜெட் ப்ளாக் கூந்தலை பெற என்ன வழி :


6 முதல் 60 இல்லை இல்லை 80 வயது வரை ஆண் பெண்ண அனைவரும் விரும்புவது அழகிய கூந்தல் .நீண்ட கூந்தல்  பரம்பரை விஷயம் என்றாலும்
இருக்கும் கூ ந்தலை நன்றாஹ  பேணுவது நம் கையில்தான் இருக்கிறது .

1. முதலில் முடியை நல்ல சீப்பு கொண்டு 2 வேளை யும் நன்கு வா ரிவிட வேண்டும் . avoid plastic comb . நல்ல தரமான wooden comb பயன்படுத்தவும் . விலை சற்று கூட இருந்தாலும் இதுதான் basic step .
2.வாரம் 2 முறை minium headbath எடுக்கவும் .எப்படி தலைக்கு குளிக்கவேண்டும் என்பதை நான் அடுத்த பதிவில் எழுதுகிறேன் .
3. முடியை இயற்கையாஹ உலரவிடவும். அதாவது துண்டால் மெ து வாஹ தவுட்டவும். a BIG NO to hair dryer
4நமது தலைமுடி மிஹவும் மென்மையானது மேலும் மாதம் 1/2 இன்ச் தான் வளரும் அதுவும் பரம்பரையை பொருத்தது ஆதனால் மிஹ      மிஹ மேன்மயாஹ கையாளவேண்டும் .
5. மாதம் ஒருமுறை சிறிது நுனி வெட்டிவிடவேண்டும் .
6.வீட்டில் தயாரித்த சீயக்காய் பொடி அல்லது நல்ல தரமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவேண்டும் .(சீயக்காய் தயாரிக்கும் முறை நான் வரும் பதிவுகளில் எழுதுகிறேன் )
7.மிஹ முக்கியமானது என்னவென்றல் ஷாம்பூ போடும்முன் கட்டாயம் முடிக்கு எண்ணெய் application செய்யவேண்டும் . இல்லையென்றல் முடி கொட்டும்.(எண்ணெய் தயாரிக்கும் முறை பற்றி நான் வரும் பதிவுகளில் எழுதுகிறேன் )
8.தலைமுடி எப்பொழுதும் dry யாக இருக்ககூடது.
9. aircondition அறையில் வெஹு நேரம் இருந்தாலும் முடி கொட்டும்.
10. Direct வெயிலிலும் முடியை expose செய்யகூடாது.

இவையெல்லாம் basic முடி பராமரிப்பு. இனி ஜெட் ப்ளாக் ,பளபளப்பான முடி எப்படி பெறுவதென்பதை அடுத்த பதிவில் காண்போம்.

மேலும்  ஒவ்வொரு type  முடி பற்றியும் அதை பாதுகாக்கும் முறை பற்றியும் வரும் பதிவுகளில் பார்ப்போம் .

நான் recommend செய்யும் comb 'ROOTS ' wooden comb . முடி இழுப்பதில்லை .நல்ல soft ,மேலும் round edges .

8 comments:

  1. அசத்தல் போஸ்ட் அக்கா ! நான் என்னை மைண்டைன் பண்ணிக்கறதே இல்லை. உங்க போஸ்ட் படிச்சாவது எனக்கு புத்தி வரட்டும். மத்த பதிவையெல்லாம் சீக்கிரம் போடுங்க படிச்சு தெரிஞ்சுக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மீரா.இதை தொடந்து கூந்தல் எண்ணெய் மற்றும் ஹென்னா தயாரிக்கும் முறை பற்றி எழுதிகொண்டிருக்கிறேன் .

      Delete
  2. அழகே உன்னை ஆராதிக்கிறேன்

    என்று சொல்லவைக்கும் அருமையான பதிவு இந்தக் கூந்தல் பராமரிப்பு.

    ஜொலிக்கும் மயில் படமும் அழகாகவே உள்ளது. பாராட்டுக்கள்.

    [தயவுசெய்து word verification என்ற தொல்லையை நீக்கிவிட்டால், சுலபமாகக் கருத்துக்கள் கூற ஏதுவாகும். Please do the needful, Madam]

    ReplyDelete
  3. திரு வை .கோ. சார் அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களுடைய முதல் வருகையினால் நான் அடையும் மகிழ்ச்சி அதிகம். தங்கள் எழுத்துகளுக்கு என்னை அறிமுகம் செய்த என் தங்கை மீராவிற்கு என் நன்றி. word verification எடுத்துவிட்டேன் .

    ReplyDelete
  4. என்னுடைய முதல் விசிட் இது. நல்ல நல்ல குறிப்புகள் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. தங்கள் முதல் வரவால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி .

    ReplyDelete