Saturday, 8 September 2012

80+ வயதிலும் ஒரு அழகு

சமர்ப்பணம் :





' கிளாசிற்கு போய்  15 நாள் ஆகிறது , என்னவெல்லாம் மிஸ் பண்ணேனோ தெரியலையே ,

'பரவாயில்லை , உடம்பு  சரியில்லாததனாலே தானே லீவ் எடுத்தது, ஈஸியா பிக்  அப் செய்துக்கலாம்,'

'ரொம்ப பயமா இருக்கு , டீச்சர் என்ன சொல்லுவாளோ  தெரியலையே '

'கவலைபடவேண்டாம் நான் வந்து சொல்லறேன் '.

இ தில் கிளாசிற்கு போகாமல் பயந்தது என் அன்பிற்குரிய அம்மா , 80+

பதில் சொன்னது நான் .

ஆச்சர்யமாக இருக்கிறது தானே!

ஆனால் இது உண்மைதான் .

என் அம்மா மிகவும் சுறுசுறுப்பான பேர்வழி . காலையில் இன்றும் 5.30 மணிக்கு எழுந்து குளித்து பூஜை மற்றும் சிறு சிறு தன்னால் முடிந்த வேலைகளை செய்து துவிட்டு பின் பக்கத்துக்கு ரோடில் இருக்கும் பாகவத  கிளாஸ் மதியம் 1.30 மணிநேரம் சென்றுவிட்டு , வீட்டிக்கு வந்து சிறிது ரெஸ்ட் எடுத்ததுகொண்டு பின் மீண்டும் மிக  அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று விஷ்ணு சஹாஸ்ரநாமம் சொல்லிவிட்டு பின் சில தமிழ் சீரியல் தொலைக்கட்சியில் பார்த்துவிட்டு பின் ரெஸ்ட் .

இப்படி  தனக்குத்தானே ஒரு routine  வைத்துக்கொண்டு  எப்பொழுதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் என் அன்னை ஒரு அதிசயபிறவிதான் . எனக்கு நினைவுதெரிந்த நாள் முதல் வீட்டு  வேலைகள் செய்துகொண்டு  குடும்பம் , வீடு என்று இருந்தவர், என் தந்தையின் மறைவிற்கு பின் , கடமைகள் எல்லாம் முடிந்து விட்ட நிலையில் , தனக்கு பிடித்தமான ஸ்லோக கிளாஸ் செல்லும் வழியில் 80 வயதிற்கு மேல் ஆரம்பித்து இன்று மிகவும் அனைவருக்கும் பிடித்தமான செல்ல student  ஆக என் அன்னை விளங்குகிறார் .

இந்த அழகான வாழ்க்கைக்கு தேவையான உள்ளதையும் , ஆரோக்யத்தையும் கொடுத்த அந்த இறைவனுக்கு என் உள்ளார்ந்த  , நெஞ்சார்ந்த நன்றி. எனக்கு , சுறுசுறுப்பிற்கும் , சிரித்த முகத்திற்கும் உதாரணமாக விளங்கும என் அன்னையே உங்களுக்கு என் salute.

15 நாட்கள் உடம்பு சுகமில்லாமலிரிந்து இன்று மீண்டும் பழைய சுறுசுறுப்புடன் நாராயணீயம் மற்றும் விஷ்ணுசஹரநாமம்  வகுப்பிற்கு  5 வயது பிள்ளையின்  உற்சாகத்துடன் செல்ல அரம்பித்திற்கும்  என் அன்னை  ஒரு அபூர்வபிறவிதான் . அதனால் தானோ என்னவோ என்றும் இளமையுடன், தினம் தினம் முக அழகு ஜொலிப்பது போல் இருக்கிறது என் அன்னைக்கு.






5 comments:

  1. //15 நாட்கள் உடம்பு சுகமில்லாமலிருந்து இன்று மீண்டும் பழைய சுறுசுறுப்புடன் நாராயணீயம் மற்றும் விஷ்ணுசஹரநாமம் வகுப்பிற்கு 5 வயது பிள்ளையின் உற்சாகத்துடன் செல்ல அரம்பித்திற்கும் என் அன்னை ஒரு அபூர்வபிறவிதான்.//

    சந்தேகமே இல்லாமல் அவர்கள் ஓர் அபூர்வ பிறவியே தான். அவர்களுக்கு என் நமஸ்காரங்கள்.

    //அதனால் தானோ என்னவோ என்றும் இளமையுடன், தினம் தினம் முக அழகு ஜொலிப்பது போல் இருக்கிறது என் அன்னைக்கு.//

    ”அழகே உன்னை ஆராதிக்கிறேன்” என்ற பெயருள்ள பதிவின் சொந்தக்காரரைப் பெற்ற அன்னையல்லவா!தினம் தினம் ஜொலிக்கத்தான் செய்யும் அவர்களின் முக அழகு. அதைத்தான் தேஜஸ் அல்லது பிரும்ம தேஜஸ் என்று சொல்வார்கள்.

    இந்த இணைப்பிலும் தங்கள் அன்புத்தாயார் போலவே ஒருவர் உள்ளார்கள் பாருங்கோ:

    http://gopu1949.blogspot.in/2011/12/blog-post.html

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    தங்களின் இந்தப் பாசப்பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய வை. கோ அவர்களுக்கு என் நன்றி. சில தினங்கள் தாமதமாக நான் acknowledge செய்வதற்கு மன்னிக்கவும் . தங்களுடைய பதிவையும் படித்து ரசித்து மகிழவும் , செய்தேன் . தங்களுடைய லேட்டஸ்ட் பதிவான நவீன ராமாயணம் படித்து சிரித்தேன் . மிகவும் அருமை .நன்றி

      Delete
  2. ஓ ......, பெரியம்மா back to routineஆ, உடம்பு தேவலையா, ரொம்ப சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. yes, manni is much better. She has resumed her classes and what more!!!!!!! she wants to write blogs!!!!!!!!!!!!Thanks Meera.

      Delete
  3. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
    சென்று பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_12.html?showComment=1407801050208#c1570914913413368880
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete